Category Archives: தெற்கெல்லைப் போராட்டம்

தெற்கெல்லைப் போராட்டம்-த.நா.கா. போக்கு:ம.பொ.சி

“தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்” என்பது பழமொழி. ஆனால், தமிழ்நாடு காங்கிரசுக்குச் சதை கிடை யாது. அதனால், தென் திருவிதாங்கூர்த் தமிழர்களுக் கிழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக அது ஆடவே இல்லை. திரு. காமராசரை நான் கேட்டுக் கொண்டதன் பேரில், அப்போது த. நா. கா. தலைவராக இருந்த திரு. எல். எஸ். கரையாளர் தென் … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தெற்கெல்லைப் போராட்டம்-ஜீவாவுடன் பேச்சு:ம.பொ.சி

ஜீவாவுடன் பேச்சு: நான் நாகர்கோயிலி லிருந்தபோது, தி. த. நா. காங்கிரஸ் தலைவர்களி லொருவரான திரு. குஞ்சன் நாடார் பி. ஏ., பி. எல். அவர்கள், தமது இல்லத்தில் எனக்கும் கம்யூனிஸ்டுத் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களுக்கும் ஒரு நாள் பகல் விருந்தளித்தார். அப்போது, தெற்கெல்லைக் கிளர்ச்சி பற்றி விவாதித் தோம். ஆகஸ்டு 11இல் திருவிதாங்கூர் … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

தெற்கெல்லைப் போராட்டம்-கடைசிச் சந்திப்பு!:ம.பொ.சி

சூலை 24ல் நான் நாகர்கோயிலில் இருந்தபோது, புத்தேரிக்குச் சென்று, நோயுற்றுப் படுக்கையிலிருந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யவர்களைப் பார்த்து, உடல்நலம் விசாரித்தேன். கவிஞர் எப்போதும் என்னிடமும் தமிழரசுக் கழகத்திடமும் மிகுந்த நல்லெண்ணம் காட்டி வந்தார். தெற்கெல்லைக் கிளர்ச்சியிலே அவர் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை யென்றாலும், இதற்கு ஆதரவளித்து வந்தார். “மாநிலங்கள் மொழிவாரி திருத்தியமைக்கப்பட வேண்டும்; … Continue reading

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்