பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ம.பொ.சிக்கு எழுதிய கடிதம்

வடக்கெல்லை போராட்டத்தில் ம.பொ.சி சிறைப்பட்ட செய்தி அறிந்து,7.9.56 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ம.பொ.சிக்கு எழுதிய கடிதம்
devletter
“தமிழ்நாடு-தமிழுக்கும் தமிழ்ப் பண்புக்கும் முரண்பட்ட முறையில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்தே அலக்கழிக்கப்பட்டு வருகிறது.“அந்த அலக்கழிவு,முடிவில் ‘தமிழ் மாகாண’மென்று கூடச் சொல்ல இயலாது – ‘எஞ்சிய சென்னை என்பதன் பெயராலேயே இழிவான முறையில் (தமிழ் மாகாணத்துக்கு) பெயரிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சென்னையையொட்டி, ஜனத் தொகையிலும் சர்வ முறையிலும் தமிழ் நாட்டிற்குப் பாத்தியப்பட்ட சித்தூரையும், திருத்தணி போன்ற தேவாலயத்தையும் இழந்து நிற்கிறது.“இதற்கென ஒரு போராட்டம் வரவேண்டிய அளவுக்கு காங்கிரசின் மந்தப் புத்தி, காலத்தை வீணாக்கிப் போராட்டம் வந்த பிறகு ஆங்கிலேயன் முறையைப் பின் பற் அடங்கு முறையைக் கையாள நினைக்கிறதே தவிர அறிவு வந்ததாக இல்லை – மந்திரி சபைக்கு! அறிவு வராது. ஏனென்றால்,காங்கிரசில் கை தூக்கிகள் மலிந்துவிட்டதாலும், மானத்தை விட பதவியும் பணமும் பெரிது எனக் கருதுகிற நபர்கள் அதை ஒட்டிக் கொண்டிருப்பதாலுமே!“எனினும், இந்த வடக்கெல்லைப் போராட்டம் நீடிக்குமானால் இதில் மந்திரி சபை வழக்கம்போல் அசட்டுத் தனத்தைக் கையாளுமானால் விபரீத விளைவுகளை எதிர்பார்க்க நேரும். அது பல பொட்டி ஸ்ரீராமுலுகளை தமிழ்நாட்டில் தயாரிக்கும். அப்பொழுது, மந்திரி சபை மிகப் பெரிய – வேண்டாத பொறுப்புகளுக்கு இலக்காகி மரியாதையையும் பதவியையும் ஒருங்கே கைவிட வேண்டிவரும். எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டால் நல்லது என்று மீண்டும் கேட்டுக் கொண்டு,தமிழ் எல்லைப் போராட்டத்திற்கு ஆசி கூறுகிறேன்.“சிறை செல்லும் தியாகிகளுக்கும் என் வணக்கம் உரித்தாகுக!
“போராட்டம் நீடித்தால் உங்களோடு பங்கு கொள்ளும் காலமும் சமீபிக்கும்!”

தேவரின் இந்தக் கடிதம் ம.பொ.சிக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

This entry was posted in வடக்கெல்லைப் போராட்டம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + two =