சிலம்புச் செல்வர் ம.பொ.சி – பட்டங்களும் பட்டயங்களும்

1. 1950 இல் பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் ‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

2. 1966 இல் ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூல் சாகித்திய அகாடமியின் பரிசைப் பெற்றுள்ளது.

3. 1972 இல் ஜனாதிபதியிடம் “பத்மஸ்ரீ” விருது பெற்றார்.மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம், பாரதி சங்கம் ஆகியவற்றிடம் தமிழ்த் தொண்டிற்காக வெள்ளிக் கேடயங்கள் பெற்றார்.

4
4. 1976 இல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தாரால் ‘கலைமாமணி’ என்ற பட்டமும் விருதும் வழங்கப் பெற்றன.

5. 1976 இல் சென்னையில் நடந்த முத்தமிழ் விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் ‘இயற்றமிழ்ச் செல்வம்’ என்ற பட்டம் வழங்கப்பெற்றது.கல்வித் துறையில் ஆற்றிய பணிகளைப் பாராட்டும் வகையில் “யுனெஸ்கோ” சார்பில் இவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

6. 1981-82. ‘டாக்டர்’ பட்டம் – சென்னைப் பல்கலைக் கழகத்தாலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாலும் வழங்கப் பட்டது.

7. 1985 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தால் ‘பேரவைச் செல்வர்’ என்ற பட்டம் வழங்கப் பட்டது.

This entry was posted in சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா, பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =