அறிஞர் அண்ணா -ம.பொ.சி

ஜூன் 1956 இல் சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் மணி விழாவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை

“ம.பொ.சி. பன்னெடுங்காலம் வாழவேண்டும். அவருடைய குறிக்கோள்கள் தமிழர் எல்லோருடைய குறிக்கோளாகவும் மாறியிருக்கின்றன.பல லட்சியங்களை அவர் நிறைவேற்றிக் கொடுக்கின்ற தன்மை ஏற்பட வேண்டும். அதற்கு பிறகு தமிழரசு நல்ல விதத்தில் தமிழகத்திலே அமைகின்ற தன்மையில் அவருடைய தொண்டு நீடித்துக் கிடைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.அதற்கு ஏற்ற வகையில் அவரும் நானும் சேர்ந்து பணியாற்றத்தக்க வாய்ப்புகள் கிடைக்குமானால்,அதை நான் மிகப் பெரிய பேறு என்று கருதுவேன்.நானும் அவரும் ஒன்றுபட்டுப் பணியாற்றுகின்ற பிரச்சினைகள் ஆயிரக்கணக்கிலே தமிழ்நாட்டில் இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஆகையினால், ஒன்றுபட்டுப் பணியாற்றத்தக்க பிரச்சினைகள் வருமானால், நிச்சயமாக ம.பொ.சி. அவர்கள் என்னைத் தம்முடைய நெருங்கிய நண்பர்கள் பட்டியலிலே முதல் பெயராக இணைத்துக் கொள்ளலாம் என்று நான் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதைப் போலவே, ஒன்றுபட்டு பணியாற்றத்தக்க பிரச்னைகளில் நான் அவரிடத்திலே ஒன்று பட்டிருப்பேன் என்பதையும் அவருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”

அறிஞர் அண்ணாவுடன் ம.பொ.சி.anna1

anna2

சென்னை நகரைத் தமிழகத்திற்குரிய தலைநகரமாக்க,ம.பொ.சி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.

(இதில் ம.பொ.சி,அறிஞர் அண்ணா,நாவலர்.இரா.நெடுஞ்செழியன்,சி.பா.ஆதித்தனர், .ஜீவானந்தம்,என்.வி.நடராசன்,ஒளவை சண்முகம், எச்.டி.ராஜா,பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப்போராட்ட வீரர் கே.விநாயகம்,பிரபல எழுத்தாளர் நாரண்.துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன், திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்)

chennai

அறிஞர் அண்ணாவுடன் ஒரு விழாவில் ம.பொ.சி தன் மனைவி ராஜேஸ்வரியுடன்
fn1

அண்ணாவின் மகன்கள் பரிமளம் இளங்கோவன் திருமண விழாவில் கலைஞர் கருணாநிதி, நடிகர் சந்திரபாபு ,நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் ம.பொ.சி (ஆண்டு 1963)
wed2

அண்ணாவின் மகன்கள் பரிமளம் இளங்கோவன் திருமண விழாவில் ம.பொ.சி பேச்சு (ஆண்டு 1963)
wed1

அண்ணாவின் இறுதி பயணத்தில் உஜ்ஜல் சிங்,சவான்.ம.பொ.சி
death1

அண்ணாவின் இறுதி பயணத்தில் மன்னை நாராயணசாமி,சி.சுப்பிரமணியம்,நம்பூத்ரி பாட்,என்.வி.நடராசன்,நாஞ்சில் மனோகரன், உஜ்ஜல் சிங், சவான், பக்தவச்சலம், நந்தா ஆகியோருடன் ம.பொ.சி
death2

This entry was posted in தலைவர்களுடன் ம.பொ.சி and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one − 1 =