About Silambu Selvar Padmashri Dr.Ma.Po.Si. Trust
ம.பொ.சி என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற ம.பொ.சிவஞானம் அவர்கள் ஒரு உண்மையான தேசியவாதியும் விடுதலை வீரரும் ஆவார். அவர் எழுதிய நூல்களோ நூற்றுக்கும் மேற்பட்டவை. அவரது தமிழ் தொண்டினைப் பாராட்டி சாகித்ய அகாடமி மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்.
பின்னாளில் அரிய பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் ம.பொ.சி அவர்களின் இளமைக் காலம் இனிமையானதாக இல்லை. பொருளாதார வசதியின்மையால் உயர் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்.ம.பொ.சி அவர்களின் மகள் மாதவி தன் தந்தையின் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் கல்வி உதவியை செய்துவருகிறார்.
இந்த அறக்கட்டளையானது தகுதியுடையவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைய வழி செய்கிறது. மேலும் தரமான கல்வியினைத் தருவதோடு சமூகத்தில் பின்தங்கியவர்களின்

பொருளதாரத்தை மேம்படுத்த உறுதுணை செய்கிறது. இத்துடன் கலை மேம்பாடு, தமிழ் இலக்கியம் , உடல் நலம் பேணல் ஆகிய துறைகளிலும் அருந்தொண்டு ஆற்றி வருகிறது.
Contact us using the below Enquiry form
 
பெயர் :
தொலைபேசி :
மின் அஞ்சல் :
தகவல் :
முகவரி :
4/344a, ஸீஷெல் அவென்யு, அண்ணா சாலை, பாலவாக்கம்,
சென்னை-600041

தொலைபேசி : 044-24510517

மின் அஞ்சல் : mapositrust@hotmail.com